பர்கூர் மலைப்பாதையில்கிரானைட் கற்கள் ஏற்றி வந்த லாரி சாய்ந்தது

பர்கூர் மலைப்பாதையில் கிரானைட் கற்கள் ஏற்றி வந்த லாரி சாய்ந்தது.
பர்கூர் மலைப்பாதையில்கிரானைட் கற்கள் ஏற்றி வந்த லாரி சாய்ந்தது
Published on

அந்தியூர்

கர்நாடக மாநிலம் ராமாபுரம் பகுதியில் இருந்து கிரானைட் கற்கள் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி ஈரோடு நோக்கி சென்றுகொண்டு இருந்தது. பர்கூர் மலைப்பாதையில் தாமரைக்கரை அருகே லாரி சென்றபோது, மழை பெய்து இருந்ததால் ரோடு சேறும், சகதியுமாக இருந்தது. அப்போது எதிரே வரும் வாகனத்துக்கு வழிவிடுவதற்காக டிரைவர் லாரியை பாதை ஓரத்துக்கு கொண்டு சென்றபோது திடீரென லாரி சாய்ந்துவிட்டது. நல்லவேளையாக லாரியை ஓட்டி வந்த டிரைவர் குமார் என்பவர் காயமின்றி உயிர் தப்பினார். மேலும் மலைப்பள்ளத்தில் லாரி உருண்டு இருந்தால் அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்கும். இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் பர்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கிரேன் கொண்டு வரப்பட்டு லாரி மீட்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com