கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில், முதற்கட்ட ஆராய்ச்சி வெற்றி - டாக்டர் சுதா சேஷய்யன்

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில், முதற்கட்ட ஆராய்ச்சி வெற்றி பெற்றுள்ளதாக டாக்டர் சுதா சேஷய்யன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில், முதற்கட்ட ஆராய்ச்சி வெற்றி - டாக்டர் சுதா சேஷய்யன்
Published on

சென்னை

எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின், துணைவேந்தர் சுதா சேஷய்யன் கூறியதாவது:-

ரிவர்ஸ் வேக்ஸினாலஜி முறையில், கொரோனா வைரஸை தடுக்கும் புரதம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில், முதற்கட்ட ஆராய்ச்சி வெற்றி அடைந்துள்ளது.

இந்த மருந்து ஓராண்டுக்குள் செயல்பாட்டுக்கு வரும். மனிதர்களுக்கு செலுத்தி ஆய்வு மேற்கொள்ளும் அடுத்தகட்ட நடவடிக்கை விரைவில் தொடங்கும் என கூறினார்.

சுதா சேஷய்யன், புஷ்கலா, தம்மண்ணா ஆகியோர் அடங்கிய குழுவினர், கொரோனா வைரஸை தடுக்கும் புரதத்தை கண்டுபிடித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com