லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் வாகன விபத்தை தடுக்க தடுப்பு கம்பிகள்:நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை

லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் வாகன விபத்தை தடுக்க தடுப்பு கம்பிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் வாகன விபத்தை தடுக்க தடுப்பு கம்பிகள்:நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை
Published on

கூடலூர், தமிழக-கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு லோயர்கேம்பில் இருந்து தமிழக எல்லை குமுளி வரை 6 கிலோ மீட்டர் தூரம் மலைப்பாதை அமைந்துள்ளது. இந்த மலைப்பாதை வழியாக தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட ஏலக்காய் தோட்ட கூலி தொழிலாளர்களை ஏற்றி செல்லும் வாகனங்கள், சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த மலைப் பாதையில் பெரும்பாலான இடங்கள் குறுகலாகவும், சில இடங்களில் கொண்டை ஊசி வளைவுகளையும் கொண்டது.

இதனால் இந்த பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை மூலம் அறிவிப்பு பலகை, ஒளிரும் ஸ்டிக்கர்கள், குவிலென்ஸ் கண்ணாடிகள் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் மலைப்பாதை வழியாக வருபவர்கள் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு வனப்பகுதியின் இயற்கை வளங்களை கண்டு ரசிக்கின்றனர். சிலர் 'செல்பி' எடுக்கின்றனர். இதனால் மலைப்பாதையோர பள்ளத்தில் தவறி விழும் அபாய நிலை உள்ளது. இதன் காரணமாக தமிழக நெடுஞ்சாலைத்துறை மூலம் லோயர்கேம்ப் -குமுளி மலைப்பாதையில் அமைந்துள்ள பாலங்களில் தடுப்பு கம்பிகள் அமைத்து கம்பி வளையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதைக்கண்ட வாகன ஓட்டிகள், மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com