தனது திருமணத்தையொட்டிமாட்டு வண்டி பந்தயம் நடத்திய புதுமாப்பிள்ளை

விளாத்திகுளம் அருகே தனது திருமணத்தையொட்டி புதுமாப்பிள்ளை மாட்டுவண்டி பந்தயம் நடத்தினார்.
தனது திருமணத்தையொட்டிமாட்டு வண்டி பந்தயம் நடத்திய புதுமாப்பிள்ளை
Published on

எட்டயபுரம்:

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அரியநாயகிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார். மாட்டு வண்டி பந்தய வீரரான இவர் பல்வேறு இடங்களில் நடந்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று உள்ளார். இவருக்கும், அவரது உறவுக்கார பெண்ணான ஆனந்தலட்சுமிக்கும் கடந்த 3-ந்தேதி திருமணம் நடந்தது

இந்த நிலையில் செல்வகுமார் தனது திருமணத்தையொட்டி மாட்டுவண்டி பந்தயம் நடத்தி சக போட்டியாளர்களை உற்சாகப்படுத்த எண்ணி, அரியநாயகிபுரத்தில் நேற்று முன்தினம் போட்டியை நடத்தினார். விளாத்திகுளம் யூனியன் தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன் கொடியசைத்து பாட்டியை தொடங்கி வைத்தார். சின்ன மாடு, பூஞ்சிட்டு என இரு பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டிகளில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 50-க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து சென்றன. போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்கள் மற்றும் மாட்டு வண்டியை ஓட்டி வந்தவர்களுக்கு பரிசுத்தொகை, சுழற்கோப்பைகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். போட்டியை நடத்திய புதுமாப்பிள்ளை செல்வகுமார், சின்ன மாட்டுவண்டி பிரிவில் 3-ம் இடம் பிடித்து வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com