சுதந்திர தினத்தை முன்னிட்டுடாஸ்மாக் கடைகள் மூடல்

சுதந்திர தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தை முன்னிட்டுடாஸ்மாக் கடைகள் மூடல்
Published on

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு வருகிற 15-ந் தேதி தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் எப்.எல்.2, எப்.எல்.3 உரிம ஸ்தலங்கள் மூடப்பட்டு இருக்க வேண்டும். அன்றைய தினத்தில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்க சட்டத்தின் கீழ் கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்று தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com