குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவையொட்டி உடன்குடி மீன் மார்க்கெட்டுகள் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவையொட்டி உடன்குடி மீன் மார்க்கெட்டுகள் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவையொட்டி உடன்குடி மீன் மார்க்கெட்டுகள் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.
Published on

உடன்குடி:

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவையெட்டி உடன்குடி மீன் மார்க்கெட்டுகள் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.

மீன் மார்க்கெட்

உடன்குடி அருகே உள்ள மணப்பாடு, பெரியதாழை, ஆலந்தலை பகுதிகளில் தினமும் காலையில் கடலில் பிடித்து கடற்கரைக்கு கொண்டு வரும் மீன்கள் காலை 10 மணி முதல் உடன்குடியில் உள்ள மீன் மார்க்கெட் மற்றும் நடுக்கடை மீன் மார்கட்டிலுள்ள கடைகளில் விற்பனை செய்யப்படும். இந்த மார்க்கெட்டுகளில் சுற்றுப்புற பகுதியிலுள்ள பொதுமக்கள் திரண்டு வந்து பதப்படுத்தப்படாத மீன்களை வாங்கி செல்வர்.

இதனால் உடன்குடி மீன்மார்க்கெட்டுகள் பரபரப்பாக காணப்படும்.

தசரா திருவிழா

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன்கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான ஆண், பெண் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கி உள்ளனர். இதனால் பக்தர்கள் அசைவ உணவுகளை தவிர்த்து, சைவ உணவுகளை சாப்பிட்டு வருகின்றனர். இதனால் இறைச்சி, மீன்கள் விற்பனை வெகுவாக குறைந்துள்ளது.

வெறிச்சோடின

மீன் மார்க்கட்டுக்கும் மக்கள் வரத்து வெகுவாக குறைந்து விட்டது. நேற்று உடன்குடியிலுள்ள மீன் மார்க்கெட்டு களுக்கு ஏராளமான மீன்கள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டு இருந்தன. மீன்களின் விலை சற்று குறைவாக இருந்த போதிலும், ஒன்றிரண்டு பேர் மட்டுமே வந்தனர். அவர்களும் குறைந்த அளவில் மீன்களை வாங்கி சென்றனர். பெரும்பாலான கடைகளில் மீன்கள் தேங்கி இருந்ததுடன், மார்க்கெட்டும் வெறிச்சோடி காணப்பட்டது.

இதுகுறித்து மீன்வியாபாரி ஒருவர் கூறுகையில், மார்க்கெட்டுக்கு அதிக அளவில் மீன்களை விற்பனைக்கு வைக்கிறோம். மேலும் மீன்கள் விலையும் குறைந்துள்ளது. ஆனால், தசரா திருவிழா தொடங்கியது முதல் மீன்கள் விற்பனை வெகுவாக குறைந்துள்ளது. எங்களுக்கும் பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது, என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com