கம்பத்தில் முதல் போக நெல் அறுவடை பணிகள் தொடக்கம்

கம்பத்தில் முதல்போக நெல் அறுவடை பணிகள் தொடங்கியது.
கம்பத்தில் முதல் போக நெல் அறுவடை பணிகள் தொடக்கம்
Published on

தேனி மாவட்டத்தில் முல்லைப்பெரியாற்று தண்ணீர் மூலம் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலப்பரப்பில் இருபோக நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு முதல் போக பாசனத்திற்காக கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடவு செய்யப்பட்ட நெல் பயிர்கள் நன்கு விளைச்சல் அடைந்து அறுவடைக்கு தயாரானது. இதில் தற்போது முதற்கட்டமாக காமயகவுண்டன்பட்டி சாலை, சின்னவாய்க்கால் பகுதிகளில் எந்திரம் மூலம் முதல்போக அறுவடை பணிகள் தொடங்கியுள்ளன. இன்னும் ஓரிரு வாரங்களில் கூடலூர், சாமாண்டிபுரம், ஆங்கூர்பாளையம், கருநாக்கமுத்தன்பட்டி பகுதியில் அறுவடை பணிகள் தொடங்க உள்ளதாக விவசாயிகள் கூறினர். அறுவடை பணி தொடங்கியதால் நெல்லுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும், மேலும் விவசாய நிலங்களுக்கு அருகிலேயே அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com