கம்பத்தில் ஓடையில் தவறி விழுந்து மூதாட்டி சாவு

கம்பத்தில் ஓடையில் தவறி விழுந்து மூதாட்டி பரிதாபமாக இறந்தார்
கம்பத்தில் ஓடையில் தவறி விழுந்து மூதாட்டி சாவு
Published on

கம்பத்தை சேர்ந்தவர் துரைசிங்கம். முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி காந்திமதி (வயது 63). நேற்று இவர், வீட்டில் இருந்து கடை வீதிக்கு நடந்து சென்றார். அப்போது கம்பம் சேனை ஓடை பகுதியில் சென்றபோது திடீரென மயக்கம் ஏற்பட்டு ஓடையில் தவறி விழுந்தார். இதில் நீரில் மூழ்கிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com