மரத்தின் மீது மோட்டார்சைக்கிள் மோதி கல்லூரி மாணவர் சாவு

போடி அருகே மரத்தின் மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார்.
மரத்தின் மீது மோட்டார்சைக்கிள் மோதி கல்லூரி மாணவர் சாவு
Published on

போடி அருகே உள்ள குரங்கணி பகுதியை சேர்ந்தவர் வெற்றி செல்வன் (வயது 18). இவர், போடி முந்தல் சாலையில் உள்ள தனியார் கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 1-ந்தேதி இவர், குரங்கணியில் இருந்து மோட்டார்சைக்கிளில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கல்லூரி அருகே சென்றபோது சாலையோரம் இருந்த மரத்தில் எதிர்பாராதவிதமாக இவரது மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந்த வெற்றி செல்வனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குரங்கணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com