ஓணம் பண்டிகை: ஈரோடு வழியாக சிறப்பு ரெயில் இயக்கம்

பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஈரோடு வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
ஓணம் பண்டிகை: ஈரோடு வழியாக சிறப்பு ரெயில் இயக்கம்
Published on

ஈரோடு,

ஓணம் பண்டிகையை முன்னிட்டு அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஈரோடு வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரல் -கொல்லம் வாரத்திற்கு இருமுறை இயங்கும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06117) அடுத்த மாதம் (ஆகஸ்டு) 13-ந்தேதி முதல் செப்டம்பர் மாதம் 5-ந்தேதி வரை வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் நள்ளிரவு 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் மாலை 4.20 மணிக்கு கொல்லத்தை சென்றடையும்.

அதேபோல் கொல்லம் சென்னை சென்ட்ரல் வாரத்திற்கு இருமுறை இயங்கும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06118) அடுத்த மாதம் (ஆகஸ்டு) 14-ந்தேதி முதல் செப்டம்பர் மாதம் 6-ந்தேதி வரை வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6.45 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 11.35 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும் என்று சேலம் ரெயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com