

சென்னை,
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சேலம் வழியாக கேரளத்துக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப் படுகிறது.
இதுகுறித்து சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
ஓணம் பண்டிகை வருகிற 26-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பெங்களூரு வில் இருந்து சேலம் வழியாக கேரளம் மாநிலம் திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையத் துக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அதன்படி, இன்று (வியாழக்கிழமை) மாலை 5.10 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படும் திருவனந்தபுரம் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06569) கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, குப்பம் வழியாக சேலத்துக்கு இரவு 9.25 மணிக்கு வந்தடையும்.
பின்னர் அந்த ரெயில் அங்கிருந்து 9.30 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக மறுநாள் காலை 10 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையத்துக்கு சென் றடைகிறது. இதேபோல் மறுமார்க்கமாக நாளை மறுநாள் (சனிக்கிழமை) மதியம் 12.40 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் பெங்களூரு சிறப்பு ரெயில் (வண்டி எண் 06570) போத்தனூர், திருப்பூர், ஈரோடு வழியாக சேலத்துக்கு இரவு 11.25 மணிக்கு வந்தடைகிறது. பின்னர் 11.28 மணிக்கு ரெயில் புறப்பட்டு குப்பம், பங் காருபேட்டை வழியாக மறுநாள் காலை 6 மணிக்கு பெங்களூரு சென்றடைகிறது.
இதேபோல், சென்னை சென்ட்ரல்-மங்களூரு சிறப்பு ரெயில் (06041) நாளை (வெள்ளிக்கி ழமை) மற்றும் 28-ந்தேதி ஆகிய 2 நாட்கள் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் சென்னை சென்ட்ரலில் இருந்து (வெள்ளிக்கிழமை) இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, சொரனூர், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு வழியாக மறுநாள் (சனிக்கிழமை) மாலை 5.00 மணிக்கு மங்களூரு ரெயில் நிலையத்தை சென்றடையும்.
மறுமார்க்கத்தில், மங்களூரு-சென்னை சென்ட்ரல் சிறப்பு ரெயில் (06042) நாளை மறுநாள்(சனிக்கிழமை) மற்றும் 29-ந்தேதிகளில் இயக்கப்படும். இந்த ரெயில் மங்களூரு ரெயில் நிலையத்தில் இருந்து சனிக்கிழமை இரவு 7.15 மணிக்கு புறப்பட்டு, காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு, சொரனூர், பாலக்காடு. போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக மறு நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 11.35 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தை சென்றடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.