ஓணம் பண்டிகை: ஈரோடு வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கம்

பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் ஈரோடு வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.
ஓணம் பண்டிகை: ஈரோடு வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கம்
Published on

ஈரோடு,

ஓணம் பண்டிகையை முன்னிட்டு அதிகரித்து வரும் பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் ஈரோடு வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. அதன்படி எஸ்.எம்.வி.டி. பெங்களூரு -திருவனந்தபுரம் வடக்கு சிறப்பு ரெயில் (வண்டி எண் 06575) இன்று (சனிக்கிழமை) மாலை 4.40 மணிக்கு எஸ்.எம்.வி.டி. பெங்களூருவில் இருந்து புறப்பட்டு, இரவு 9.25 மணிக்கு சேலத்துக்கும், 10.30 மணிக்கு ஈரோட்டுக்கும் வருகிறது. பின்னர் இங்கிருந்து புறப்பட்டு திருப்பூர், போத்தனூர் வழியாக நாளை (ஞாயிற்றுக் கிழமை) காலை 10 மணிக்கு திருவனந்தபுரத்தை சென்றடையும்.

இதேபோல் திருவனந்தபுரம் வடக்கு -பெங்களூரு கண்டோன்மென்ட் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06576) நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 12.40 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கில் இருந்து புறப்பட்டு, போத்தனூருக்கு இரவு 9.30 மணிக்கும், திருப்பூருக்கு 10.28 மணிக்கும், ஈரோட்டுக்கு 11.10 மணிக்கும் வருகிறது. பின்னர் இங்கிருந்து புறப்பட்டு சேலம் வழியாக நாளை மறுநாள் (திங்கட்கிழமை) அதிகாலை 5.15 மணிக்கு பெங்களூரு கண்டோன்மென்ட்டை சென்றடையும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com