ஓணம் பண்டிகை: தவெக தலைவர் விஜய் வாழ்த்து


ஓணம் பண்டிகை: தவெக தலைவர் விஜய் வாழ்த்து
x

கேரளா மட்டுமின்றி தமிழகத்திலும் இப்பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

சென்னை

மலையாள மொழி பேசும் மக்களின் கலாச்சார விழாவான ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் திருவோண நட்சத்திர நாளில் கொண்டாடப்படுகிறது. கேரளாவில் கொண்டாடப்படும் பாரம்பரியமிக்க இந்த பண்டிகையில் அனைத்து தரப்பு மக்களும் உற்சாகமாக பங்கேற்று மகிழ்வார்கள். கேரள மன்னன் மகாபலி சக்கரவர்த்தியின் நினைவாக இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில தங்கள் வீடு தேடி வரும் மகாபலி அரசனை வரவேற்கும்விதமாக விதவிதமான பூக்களால் அத்தப்பூ கோலம் இடுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்கள் கேரள பெண்கள். கேரளா மட்டுமின்றி தமிழகத்திலும் இப்பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் இன்று ஓணம் பண்டிகை வழக்கமாக உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதன்படி, நடிகரும், தவெக கட்சி தலைவருமான விஜய் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில்,

“ஓணம் பண்டிகையைக் கொண்டாடும் மலையாளச் சொந்தங்கள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story