

சென்னை,
ஓணம் பண்டிகையையொட்டி, மங்களூரு - கொல்லம் இடையே நாளை (செவ்வாய்கிழமை) சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
மங்களூரு ஜங்ஷனில் இருந்து நாளை (செவ்வாய்கிழமை) காலை 8 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06052) மாலை 6.45 மணிக்கு கொல்லத்தை சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில், கொல்லத்தில இருந்து நாளை இரவு 9 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06051) மறுநாள் காலை 9.30 மணிக்கு மங்களூரு ஜங்ஷனை சென்றடையும்.
20 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு இன்று (24-ந் தேதி) பகல் 12 மணிக்கு தொடங்கிவிட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.