மீண்டும் ஒற்றை யானை அட்டகாசம்

பேரணாம்பட்டு அருகே மீண்டும் ஒற்றை யானை நெற் பயிர்களை மிதித்தும் மாமரங்களை முறித்தும் அட்டகாசத்தில் ஈடுபட்டது.
மீண்டும் ஒற்றை யானை அட்டகாசம்
Published on

ஒற்றை யானை

பேரணாம்பட்டு வனச்சரக பகுதியிலுள்ள சேராங்கல், பத்தலப்பல்லி, எருக்கம்பட்டு, கோட்டையூர், அரவட்லா, பாஸ்மார்பெண்டா, கொத்தூர், பொதலகுண்டா, ரங்கம் பேட்டை, குண்டலபல்லி உள்ளிட்ட காப்புக் காடுகளை யொட்டி அமைந்துள்ள விவசாய நிலங்களிலும், மா, வாழை, தென்னை தோப்புகளிலும், காட்டு யானைகள் கூட்டம் மற்றும் அப்பகுதியில் சுற்றி வரும் ஒற்றை யானை தொடர்ந்து பயிர்களை சேதப்படுத்தி சூறையாடி கொண்டு வருகிறது.

இந்த நிலையில் சேராங்கல் காப்புக்காடு - மோர்தானா காப்புக்காடு இடையே சுற்றித் திரிந்து வரும் ஒற்றையானை நேற்று அதிகாலை 3மணியளவில் குண்டலப் பல்லி வன பகுதியையொட்டியுள்ள மத்தேயு என்பவர் நிலத்தில் நடவு செய்யப்பட்டிருந்த அரை ஏக்கர் நெற்பயிர்களை மிதித்து நாசம் செய்துள்ளது.

அட்டகாசம்

மேலும் அருகிலுள்ள கஸ்தூரி என்பவருடைய மாந்தோப்பில் புகுந்து 8 மாமரங்களை முறித்து அதிலிருந்த மாங்காய்களை ருசித்து துவம்சம் செய்தது.

ஒற்றை யானையின் அட்டகாசம் காலை 6 மணி வரை நீடித்தது. இதையடுத்து விவசாயிகள், கிராம மக்கள் உதவியுடன் வனத்துறையுடன் பட்டாசு, வெடித்து அருகிலுள்ள மோர்தானா காப்புக் காட்டிற்கு ஒற்றை யானையை விரட்டியடித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com