தேஜ கூட்டணியின் ஆட்சி அமைந்தவுடன் அனைத்து ”சார்”களும் சிறைக்குச் செல்வது உறுதி - டிடிவி தினகரன்

பேராசிரியர் குற்றத்தில் ஈடுபட்டிருப்பது உறுதி செய்யப்பட்டால் பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிடிவி வலியுறுத்தி உள்ளார்.
தேஜ கூட்டணியின் ஆட்சி அமைந்தவுடன் அனைத்து ”சார்”களும் சிறைக்குச் செல்வது உறுதி - டிடிவி தினகரன்
Published on

சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் மீது மாணவி புகார் - ஏற்கனவே தமிழகத்தை உலுக்கிய பாலியல் புகாரில் தொடர்புடைய அந்த "சார்" கைது செய்யப்படாததன் விளைவா ?

அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் பேராசிரியர் ஒருவர், அப்பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வரும் மாணவியின் ஏழ்மையைப் பயன்படுத்திக் கடந்த மூன்று ஆண்டுகளாக பாலியல் ரீதியாகத் தன்னை துன்புறுத்தியதாக எழுந்திருக்கும் புகார் அங்கு பயிலும் ஒட்டுமொத்த மாணவிகளின் பாதுகாப்பை மீண்டும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

இதே அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடைபெற்ற பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் ”சார்” இதுவரை கைது செய்யப்படாத நிலையில், தற்போதைய பாலியல் புகாரின் பின்னணியிலும் அதே ”சார்” இருப்பாரோ ? என்ற சந்தேகம் அப்பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவ, மாணவியர்களின் மத்தியில் எழுந்துள்ளது.

எனவே, உலக அளவில் புகழ்பெற்ற அண்ணா பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் அமைந்திருக்கும் இந்த பாலியல் குற்றச்சாட்டு மீது விரிவான விசாரணை மேற்கொண்டு, பேராசிரியர் குற்றத்தில் ஈடுபட்டிருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர் மீது பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையை வலியுறுத்தும் நேரத்தில், தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி அமைந்தவுடன் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அனைத்து ”சார்”களும் சிறைக்குச் செல்வது உறுதி என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com