ஒண்டிவீரன் நினைவு தினம் அனுசரிப்பு; கலெக்டர்- அரசியல் கட்சியினர் மரியாதை

வாசுதேவநல்லூர் அருகே ஒண்டிவீரன் நினைவு தூணுக்கு கலெக்டர் மற்றும் அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
ஒண்டிவீரன் நினைவு தினம் அனுசரிப்பு; கலெக்டர்- அரசியல் கட்சியினர் மரியாதை
Published on

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூர் அருகே ஒண்டிவீரன் நினைவு தூணுக்கு கலெக்டர் மற்றும் அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

நினைவு தினம்

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே நெற்கட்டும்செவல் பச்சேரி கிராமத்தில் விடுதலை போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 252-வது நினைவு நாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்பட்டது.

மாவட்ட கலெக்டர் துரை.ரவிச்சந்திரன் தலைமை தாங்கி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சங்கரன்கோவில் உதவி கலெக்டர் சுப்புலட்சுமி, சிவகிரி தாசில்தார் ஆனந்த், மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் எஸ்.பழனி நாடார் எம்.எல்.ஏ தலைமையில் காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர் சங்கை கணேசன் மற்றும் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

சங்கரன்கோவில்

சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஒண்டிவீரன் நினைவு தின நிகழ்ச்சி நடந்தது. தி.மு.க. சட்டத்துறை இணைச் செயலாளருமான பரந்தாமன் எம்.எல்.ஏ., தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கி அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஒண்டிவீரன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கரபாண்டியன், ஒன்றிய செயலாளர் பெரியதுரை, நகர செயலாளர் பிரகாஷ், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் அழகு துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பாலாபிஷேகம்

நெற்கட்டும் செவல் பச்சேரி கிராமத்தில் ஒண்டிவீரன் நினைவு தூணிற்கு காலை 8 மணி அளவில் கிராம மக்கள் பாலாபிஷேகம் செய்து, முளைப்பாரி ஊர்வலம் நடத்தி மரியாதை செலுத்தினார்கள்.

வாசுதேவநல்லூர் ஒன்றிய விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் ஒண்டிவீரன் நினைவு தூணிற்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் முத்துவளவன், அஜிஸ், விஸ்வா, அபிலாஷ், முத்துகுமார், நாகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தமிழ் புலிகள் கட்சி சார்பில் மாநில நிதி செயலாளர் கரு.சித்தார்த்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாநில இளம் புலிகள் அணி துணை செயலாளர் தமிழ் வேந்தன், தென்காசி வடக்கு மாவட்டம் செயலாளர் சந்திரசேகர் மற்றும் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். ஆதி தமிழர் கட்சி சார்பில் நிறுவன தலைவர் ஜக்கையன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் திராவிட தமிழர் இயக்கம் மற்றும் 13-க்கும் மேற்பட்ட சமுதாய அமைப்புகள், மாநிலம் முழுவதும் இருந்து கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com