பொதுமக்களை மிரட்டுதல் வழக்கில் ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லை மாநகரம், தச்சநல்லூரை சேர்ந்த ஒருவர் மாநகர பகுதியில் பொதுமக்களை மிரட்டுதல் வழக்கில் சம்பந்தப்பட்டவர் ஆவார்.
குண்டர் சட்டம்
Published on

திருநெல்வேலி,

திருநெல்வேலி மாநகரம், தச்சநல்லூரைச் சேர்ந்த கருப்பசாமி மகன் சங்கர் (வயது 40) என்பவர் நெல்லை மாநகர பகுதியில் பொதுமக்களை மிரட்டுதல் வழக்குகளில் சம்மந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டு வந்தார்.

குண்டர் சட்டத்தில் கைது:

இதனையடுத்து தச்சநல்லூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டரின் பரிந்துரையின் பேரில் திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனரின் உத்தரவுப்படி நேற்று சங்கர் என்பவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com