சென்னையில் “தொழில்முனைவோருக்கான ஒரு நாள் ChatGPT பயிற்சி வகுப்பு”

வணிகத் தேவைகளுக்கு ஏற்ப துல்லியமான கட்டளைகளை எவ்வாறு உருவாக்குவது என்பது பற்றிய பயிற்சி அளிக்கப்படும்.
சென்னையில் “தொழில்முனைவோருக்கான ஒரு நாள் ChatGPT பயிற்சி வகுப்பு”
Published on

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN), சிறு மற்றும் நடுத்தர வணிக உரிமையாளர்கள் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், மற்றும் புதிய தொழில் தொடங்க விரும்புபவர்களுக்காக செயல்பாடுகளை ChatGPT-பயன்படுத்தி வணிக எளிமைப்படுத்தவும், திறன் மேம்படுத்தவும், செலவுகளை குறைக்கவும் உதவும் தகவல்கள் மற்றும் நடைமுறை பயிற்சிகளை இந்த ஒரு நாள் நேரடிப் பயிற்சி வரும் 30.06.2026 தேதி நடைபெற உள்ளது.

முக்கிய அம்சங்கள்:

ChatGPT அறிமுகம் மற்றும் பிராம்ப்ட் இன்ஜினியரிங் (Prompt Engineering): ChatGPT-யின் முழுத் திறன்கள் மற்றும் உங்கள் வணிகத் தேவைகளுக்கு ஏற்ப துல்லியமான கட்டளைகளை (Prompts) எவ்வாறு உருவாக்குவது என்பது பற்றிய பயிற்சி.

இலக்குகள் மற்றும் தொலைநோக்கு திட்டமிடல்: தொழில்நுட்பத்தின் Al உதவியுடன் உங்கள் வணிகத்தின் குறிக்கோள்களை வடிவமைத்து, அதை அடைவதற்கான செயல் திட்டங்களை உருவாக்குதல்.

சந்தைப்படுத்தல் மற்றும் பிராண்டிங் உத்திகள் (Marketing & Branding): சோசியல் மீடியா திட்டமிடல், புதிய விளம்பர உத்திகள் மற்றும் உங்கள் பிராண்டை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் புதுமையான வழிகள்.

உள்ளடக்க உருவாக்கம் மற்றும் வாடிக்கையாளர் தொடர்பு (Content Creation): ஈர்க்கக்கூடிய வணிகக் கட்டுரைகள், விளம்பர வரிகளை விரைவாக உருவாக்குதல் மற்றும் வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துதல்.

வணிக வளர்ச்சி கண்காணிப்பு (Performance Tracking): வணிகத் தரவுகளை (Data) ஆய்வு செய்து, நிறுவனத்தின் வளர்ச்சியை சாட்ஜிபிடி மூலம் துல்லியமாகக் கண்காணிக்கும் முறைகள்.

நேரடிப் பிரச்சினை தீர்த்தல் (Real-Time Problem Solving): 25 கலந்துரையாடல் அமர்வில், பங்கேற்பாளர்கள் தங்களது தற்போதைய தொழில்முறை சவால்களைப் பகிர்ந்து, அதற்கான தீர்வுகளை AI மூலம் உடனடியாகப் பெறலாம்.

"பங்கேற்பாளர்கள், பயனுள்ள ChatGPT ப்ராம்ப்ட்டுகள் (Prompts) அடங்கிய பிரத்யேக மின்புத்தகத்தையும் (E-book), தினசரி ப்ராம்ப்ட் வழிகாட்டல்கள் மற்றும் புதிய தகவல்களைப் பெறுவதற்கான வாட்ஸ்அப் (WhatsApp) சமூக அணுகலையும் பெறுவார்கள்.".

தொடர்பு மற்றும் முன்பதிவு விவரங்கள்:

முன்பதிவு மற்றும் கூடுதல் விவரங்களுக்கு, அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்: www.editn.in

கூடுதல் விவரங்களுக்கு, வாரநாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை கீழ்வரும் எண்களைத் தொடர்பு கொள்ளலாம்:

கைப்பேசி எண்கள்: 9840114680 / 9360221280

அரசு சான்றிதழ் வழங்கப்படும்

முன்பதிவு அவசியம்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com