'விவசாயிகளுடன் ஒரு நாள்' எம்.எல்.ஏக்களுக்கு புதிய திட்டம் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

'விவசாயிகளுடன் ஒரு நாள்' என்ற திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதியுடன் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
'விவசாயிகளுடன் ஒரு நாள்' எம்.எல்.ஏக்களுக்கு புதிய திட்டம் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
Published on

சென்னை

சட்டசபையில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆதி திராவிட பழங்குடியின விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ஆழ்துளை அல்லது குழாய் கிணறுகள் அமைத்து மின் மோட்டார் வழி நீர் பாசன வசதிக்கு ரூ.12 கோடி செலவிடப்படும் என கூறினார். வேளாண்துறை சார்பில் 25 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் தங்கள் தொகுதியில் உள்ள கிராமத்திற்கு சென்று விவசாயிகள் கருத்தை கேட்டாக வேண்டும். விவசாயிகள் கருத்துக்களைக் கேட்டு அதை தீர ஆராய்ந்து அவர்களுக்கு தீர்வு காண வேண்டும் என கூறினார்.

'விவசாயிகளுடன் ஒரு நாள்' என்ற திட்டத்தை முதல்-அமைச்சர் அனுமதியுடன் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னிர் செல்வம் அறிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com