கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் மேலும் ஒருவர் பலி

இந்தியாவில் கொரோனா பரவல் மெல்ல அதிகரித்து வருகிறது
சென்னை
இந்தியாவில் கொரோனா பரவல் மெல்ல அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் வைரஸ் பாதிப்பு பரவி வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனாவால் நேற்று ஒருவர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 76 வயது முதியவர் நேற்று உயிரிழந்துள்ளார். இதனால் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை, மாநிலத்தில் மொத்தம் 216 பேர் கொரோனாவுக்கு சிகிச்சைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை 4 ஆயிரத்து 302 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 44 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story






