கார் மோதி ஒருவர் பலி

கார் மோதி ஒருவர் பலியானார்.
கார் மோதி ஒருவர் பலி
Published on

மணிகண்டம் யூனியன் அலுவலகம் எதிரே திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு சாலையை கடக்க முயன்றார். அப்போது, ஓசூரை சேர்ந்த சரவணமூர்த்தி (வயது 38) என்பவர் ஓட்டிச்சென்ற கார் எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் திருச்சி அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து மணிகண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு வழக்கு பதிவு செய்து இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com