லாரி மோதி ஒருவர் பலி

கடலூர் அருகே லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலியானார்.
லாரி மோதி ஒருவர் பலி
Published on

கடலூர் முதுநகர்

கடலூர் முதுநகர் சாலக்கரை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 50). இவர் நேற்று காலை கடலூர் முதுநகர் செல்லங்குப்பத்தில் கடலூர்-சிதம்பரம் சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அரியலூரில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த லாரி ஒன்று அவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com