

சென்னை,
இது குறித்து முதலமைச்சர் பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்தவர்களின் விவரம் பின்வருமாறு:-
* திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், சின்னவீரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திரு. வீரமுத்து என்பவரின் மகன் செல்வன் ஜெகநாதன் என்பவர் வாய்க்காலில் குளிக்கச் சென்ற போது நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார் என்ற செய்தியையும்,
* உடுமலைப்பேட்டை வட்டம், கணக்கம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த திரு.கிருஷ்ணன் என்பவரின் மகன்கள் செல்வன் சஞ்சய் மற்றும் செல்வன் ஆகாஷ் ஆகிய இருவரும் வாய்க்காலில் குளிக்கச் சென்ற போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும்;
* தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டம், காசிதர்மம் கிராமத்தைச் சேர்ந்த திருமலைக்குமார் என்பவரின் மகன் செல்வன் தனபால் என்பவர் பாவூர்சத்திரம் சடையப்பபுரம் கிராமத்திலுள்ள ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
* கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் வட்டம், கொல்லங்கோடு கிராமத்தைச் சேர்ந்த திரு. பர்ணபாஸ் என்பவரின் மகன் செல்வன் அகீஸ் என்பவர் கடலில் குளிக்கும் போது, கடல் அலையில் சிக்சி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
* சென்னை மாவட்டம், அயனாவரம் வட்டம், வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த திரு. நீலகண்டன் என்பவரின் மகன் திரு. பிலீப்குமார், அம்பத்தூர் வட்டம், கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த திரு. சுந்தரம் என்பவரின் மகன் திரு. மணிகண்டன் மற்றும் திரு. செல்வம் என்பவரின் மகன் திரு. தமிழ்செல்வன் ஆகிய மூன்று பேரும் ஏரியில் குளிக்கச் சென்ற போது, ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்தனர் என்ற செய்தியையும்;
* நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், எலச்சிபாளையம் கொன்னையாறு கிராமத்தைச் சேர்ந்த திரு.செந்தில்குமார் என்பவரின் மகன் செல்வன் தியானிஷ் மற்றும் சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், கொங்கணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த திரு. வெங்கடேசன் என்பவரின் மகன் செல்வன் சந்தோஷ்குமார் ஆகிய இருவரும் கோடி வாய்க்கால் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும்;
* திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம், வீரளூர் கிராமத்தைச் சேர்ந்த திருமதி. காசியம்மாள் என்பவரின் கணவர் திரு. சேட்டு என்பவர் தேனீக்கள் கொட்டி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
* நாகப்பட்டினம் மாவட்டம் மற்றும் வட்டம், புதிய நம்பியார் நகர் பகுதியைச் சேர்ந்த திரு. பொன்னுசாமி என்பவரின் மகன் திரு.விஜயகுமார் என்பவர் கடலில் மீன் பிடி பணியின் போது, கடலில் தவறி விழுந்துஉயிரிழந்தார் என்ற செய்தியையும்;
* சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டம், கொட்டகுடி கிராமத்தைச் சேர்ந்த திரு. வடிவேல் என்பவரின் மகன் செல்வன்
சந்திரசேகர் என்பவர் குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும் போது, நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
* கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், பரிந்தல் கிராமத்தைச் சேர்ந்த திரு. முருகன் என்பவரின் மகன் செல்வன் மதன் என்பவர் ஏரியில் குளிக்கச் சென்ற போது, ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
* கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், பாலி கிராமத்தைச் சேர்ந்த திரு. தேவேந்திரன் என்பவரின் குழந்தைகள் செல்வன் யோகேஷ் மற்றும் செல்வி சமீரா ஆகிய இருவரும் குளத்தில் குளிக்க சென்ற போது, எதிர்பாராத விதமாக குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும்;
* கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம், கடியப்பட்டணம் கிராமத்தைச் சேர்ந்த திருமதி விமலஜோதி என்பவரின் கணவர் திரு. சகாய சுரேஷ் என்பவர் கடலில் மீன்படி பணியின் போது, படகில் விபத்து ஏற்பட்டு உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
* விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டம், சரவணப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த திரு. குமரவேல் என்பவரின் மகன் செல்வன் பரத்குமார் என்பவர் குளிக்க சென்ற போது, நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
* திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சி மேற்கு வட்டம், தென்னூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த திரு. பிரேம்குமார் என்பவரின் மகன் சிறுவன் யஸ்வந்த் என்பவர் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கழிவு நீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
* கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், கிள்ளை தெற்கு கிராமத்தைச் சேர்ந்த திரு. சுப்புராயன் என்பவரின் மகன் திரு. மாரி என்பவர் வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
* ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வட்டம், கொண்டபாளையம் கிராமத்தின் சின்னமலை அடிவாரத்தில் உள்ள குளத்திற்கு சென்ற திரு. ஜெயராமன் என்பவரின் மகன் செல்வன் ஜெகன் மற்றும் திரு. சக்திவேல் என்பவரின் மகள் செல்வி அபிநயா ஆகிய இருவரும் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும்;
* திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், சேத்துப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த திரு. நீலமேகம் என்பவரின் மகள் செல்வி சினேகா கீழ்கொவளைவேடு கிராமத்தில் உள்ள சித்தேரியில் எதிர்பாராத விதமாக தவறி நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
*நீலகிரி மாவட்டம், உதகை வட்டம், குமரன் நகர் பகுதியைச் சேர்ந்த திரு. பாலகிருஷ்ணன் என்பவரின் மகன் திரு. கணேஷ் என்பவர் நீர் வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக நீரில் வழுக்கி விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.
இவ்வாறு பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 24 நபர்களின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேற்கண்ட பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 24 நபர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.