மேலும் ஒருவர் கைது

கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
மேலும் ஒருவர் கைது
Published on

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி சந்தன மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பிள்ளையார் மனைவி மாரியம்மாள் (வயது 56) கடந்த மாதம் 24-ந்தேதி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதற்கு பழிக்குப்பழியாக சேரன்மாதேவி சந்தனமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்துப்பாண்டியன் என்ற ராசு (62) வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து சேரன்மாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக தெற்கு சங்கன்திரடு பகுதியைச் சேர்ந்த செல்வம் (23), மகாராஜன் (19) ஆகிய 2 பேரை ஏற்கனவே கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த சேரன்மாதேவி விவேகானந்தர் தெருவை சேர்ந்த ராஜ்குமாரை (29) போலீசார் நேற்று கைது செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com