குண்டர் சட்டத்தில் மேலும் ஒருவர் கைது

வாலிபர் கொலை வழக்கு தொடர்பாக மேலும் ஒருவரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
குண்டர் சட்டத்தில் மேலும் ஒருவர் கைது
Published on

சேரன்மாதேவி சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 39). இவர் கடந்த ஆகஸ்டு மாதம் 28-ந்தேதி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஏற்கனவே 5 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில் சங்கன்திரடு நடுத்தெருவை சேர்ந்த லட்சுமணன் மகன் செல்வம் என்ற பட்டை (வயது 20) என்பவரும் நேற்று குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com