திருட்டு வழக்கில் மேலும் ஒருவர் கைது

திருட்டு வழக்கில் மேலும் ஒருவர் கைது
திருட்டு வழக்கில் மேலும் ஒருவர் கைது
Published on

அம்பை:

கல்லிடைக்குறிச்சி கோல்டன் நகரைச் சேர்ந்தவர் முத்துகுமார். இவர் சம்பவத்தன்று சங்கரன்கோவிலுக்கு சென்றார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் அவரது வீட்டின் கதவின் பூட்டை உடைத்து திறந்து, 23 கிராம் தங்க நகை, 169 கிராம் வெள்ளி, ரூ.27 ஆயிரத்தை திருடிச் சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கீழவைராவிகுளத்தைச் சேர்ந்த வசந்தகோபி (வயது 22), அடைய கருங்குளத்தை சேர்ந்த கண்ணன் (46), இசக்கிபாண்டி (34), இளையராஜா (30) ஆகியோர் முத்துகுமாரின் வீட்டில் திருடியது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த திருப்பூரை சேர்ந்த மணிமாறனை (34) போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 23 கிராம் தங்க நகை, 169 கிராம் வெள்ளி, ரூ.27 ஆயிரத்தை மீட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com