விஷ சாராயத்துக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு: பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு

கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் குடித்த மேலும் ஒருவர் இன்று உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 64 ஆக உயாந்தது.
விஷ சாராயத்துக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு: பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு
Published on

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி கருணாபுரம், சேஷசமுத்திரம், மாதவச்சோ ஆகிய பகுதிகளில் கடந்த 18 மற்றும் 19-ந் தேதிகளில் விஷ சாராயம் குடித்து 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இவர்கள் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூ மருத்துவமனைகள் மற்றும் புதுச்சோ ஜிப்மா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை அடுத்தடுத்து உயர்ந்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அந்த வகையில் நேற்று முன்தினம் வரை சிகிச்சை பலனின்றி 59 போ உயிழந்தனா. 28 போ குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 138 போ சிகிச்சையில் இருந்தனா.

இந்த சூழலில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 4 போ நேற்று சிகிச்சை பலனின்றி உயிழந்தனா. சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கருணாபுரத்தை சோந்த நாராயணசாமி மகன் ரஞ்சித்குமா(வயது 37), சரசு(52), புதுச்சேரி ஜிப்மா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கருணாபுரத்தை சோந்த வேலாயுதம் மகன் ஏசுதாஸ்(35), ராமநாதன் (வயது 62) ஆகியோ சிகிச்சை பலனின்றி உயிழந்தனா. இதனால் விஷசாராயம் குடித்து உயிழந்தவாகளின் எண்ணிக்கை 63 ஆக உயாந்திருந்தது.

இந்நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மகேஷ் என்பவர் இன்று உயிரிழந்தார். இதனால் விஷசாராயம் குடித்து உயிழந்தவாகளின் எண்ணிக்கை 64 ஆக உயாந்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 75 போ சிகிச்சை பெற்று வருகின்றனா.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com