இந்த படத்தில் இருப்பவர்களில் ஒருவர் அமைச்சர், இன்னொருவர் எம்.பி. - யார் தெரிகிறதா..?


இந்த படத்தில் இருப்பவர்களில் ஒருவர் அமைச்சர்,  இன்னொருவர் எம்.பி. - யார் தெரிகிறதா..?
x

தமிழக அமைச்சர் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில், பழைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, தனது சகோதரிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக நிதி அமைச்சராக இருக்கும் தங்கம் தென்னரசு இன்று தனது எக்ஸ் சமூக வலைதளத்தில், பழைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, தனது சகோதரிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதாவது, தென்சென்னை தொகுதி தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் அவரது உடன் பிறந்த சகோதரி. அவருடைய பிறந்த நாளையொட்டி, அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள பதிவின் விவரம் வருமாறு:-

தாய்க்கு நிகரான பேரன்பும், தந்தைக்கு நிகரான கருணையும் கொண்டு, தலைமகளாக நின்று வழி நடத்தும் என் அன்பு அக்கா, தமிழச்சிக்கு என் இதயம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.

உனது அன்பு மக்களுக்கானதாகட்டும். உனது பொதுவாழ்வு இம்மண்ணுக்கானதாகட்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



1 More update

Next Story