ஆவடி அருகே வந்தே பாரத் ரெயில் மோதி ஒருவர் உயிரிழப்பு

தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரெயில் மோதி பூ வியாபாரி உயிரிழந்தார்.
ஆவடி அருகே வந்தே பாரத் ரெயில் மோதி ஒருவர் உயிரிழப்பு
Published on

சென்னை அடுத்த ஆவடி கௌரிபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சூரிய நாராயணன் (45 வயது). பூ வியாபாரி. இன்று வழக்கம் போல் பூ வியாபாரம் செய்ய சென்றார். இந்த நிலையில் ஆவடி அருகே சேக்காடு சுரங்கப்பாதை அருகே தண்டவாளத்தை கடந்தபோது, கோயம்புத்தூரில் இருந்து சென்னை சென்ற வந்தே பாரத் ரெயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஆவடி ரெயில்வே போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரெயில் மோதி பூ வியாபாரி பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com