கிராம ஊராட்சி தலைவர்-வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தலா ஒருவர் வேட்பு மனு தாக்கல்

பெரம்பலூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சி தலைவர்-வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தலா ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
கிராம ஊராட்சி தலைவர்-வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தலா ஒருவர் வேட்பு மனு தாக்கல்
Published on

பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பெரம்பலூர் ஒன்றியத்துக்குட்பட்ட மேலப்புலியூர் கிராம ஊராட்சி தலைவர் பதவி, ஆலத்தூர் ஒன்றிய இரூர் கிராம ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர் பதவி, பிலிமிசை கிராம ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் பதவி, வேப்பந்தட்டை ஒன்றிய வி.களத்தூர் கிராம ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர் பதவி, வேப்பூர் ஒன்றிய கீழப்புலியூர் கிராம ஊராட்சி 8-வது வார்டு உறுப்பினர் பதவி என மொத்தம் ஒரு கிராம ஊராட்சி தலைவர், 4 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவியிடங்களுக்கு இடைத்தேர்தல் ஜூலை மாதம் 9-ந்தேதி நடக்கிறது. அந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு ஒன்றிய அலுவலகத்திலும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு, அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் கடந்த 20-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மேலப்புலியூர் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட பெண் ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று மேலப்புலியூர் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட ஆண் ஒருவரும், பிலிமிசை கிராம ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட பெண் ஒருவரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் வருகிற 27-ந்தேதி ஆகும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com