களத்திலிருந்து ஒன்றை தெளிவாக உணரமுடிகிறது - தேர்தல் முடிவு குறித்து ஜோதிமணி எம்.பி. கருத்து

தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கு கடந்த 23-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் 85.10 சதவீத வாக்குகள் பதிவானது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது.

தமிழகத்தில் பெரும்பான்மைக்கு 118 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்ற நிலையில், பல்வேறு நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெவ்வேறாக இருப்பதால், "ஆட்சியை பிடிப்போம்" என்ற நம்பிக்கையில் உள்ள அரசியல் தலைவர்கள் தலை சுற்றலில் உள்ளனர்.

மே 4-ந் தேதி தேர்தல் முடிவு எப்படி இருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு இப்போதே தமிழக மக்களிடம் இருந்து வருகிறது. இந்த நிலையில் தேர்தல் முடிவு குறித்து காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

களத்திலிருந்து ஒரு விசயத்தை மட்டும் மிகத்தெளிவாக உணர முடிகிறது. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் இவர்களின் தாக்கம் தேர்தல் முடிவைத் தீர்மானிப்பதில் மிக முக்கியக் காரணியாக இருக்கும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com