குன்னூர் வனப்பகுதியில் ஒரு டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்!

பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் விளைவுகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்!
Published on: 

வெலிங்டன்,

குன்னூர் வனத்துறை சார்பில், சிங்காரா வன காப்பகம் மற்றும் லேம்ஸ் ராக் செல்லும் வழியில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் தூய்மை பணி நடைபெற்றது.

தூய்மை பணி

குன்னூர் வனச்சரகர் வீரமணி, வனத்துறையினர், சுற்றுச்சூழல் பசுமை கழக ஒருங்கிணைப்பாளர் ரோஸ் லீமா, தனியார் கல்லூரி மாணவ-மாணவிகள், தன்னார்வலர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர். இதில் வனப்பகுதியில் இருந்து ஒரு டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டு, நகராட்சி தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

வனவிலங்கு வாழ்விடங்கள், நீர்நிலைகளில் பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் விளைவுகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com