சுள்ளான் ஆற்றில் வெங்காய தாமரை செடிகளை அகற்ற வேண்டும்

வடக்குமாங்குடி அருகே சுள்ளான் ஆற்றில் வெங்காய தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுள்ளான் ஆற்றில் வெங்காய தாமரை செடிகளை அகற்ற வேண்டும்
Published on

வடக்குமாங்குடி அருகே சுள்ளான் ஆற்றில் வெங்காய தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுள்ளான் ஆறு

தஞ்சை மாவட்டத்தில் உள்ள முக்கிய பாசன ஆறுகளில் சுள்ளான் ஆறும் ஒன்றாகும். இதன் மூலம் பாபநாசம் மற்றும் வலங்கைமான் வட்டத்தில் 1,936 எக்டேர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பாபநாசம் தாலுகாவில் மட்டும் வேம்பகுடி, புரசக்குடி, அகரமாங்குடி, சோலைபூஞ்சேரி, கிடங்காநத்தம் பொன்மான்மேய்ந்தநல்லூர், மட்டையான்திடல், மேலசெம்மங்குடி உள்பட பல கிராமங்களில் உள்ள பலநூறு ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

தற்போது சுள்ளான் ஆற்றில் வேம்பகுடியில் இருந்து அகரமாங்குடி வரையில் 2 கிலோமீட்டர் தூரம் வரை ஆற்றில் அதிகளவில் வெங்காய தாமரை செடிகள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளன. இவை சுள்ளான் ஆறு முழுவதும் படர்ந்துள்ளதால் பாசன வாய்க்கால்களுக்கு தண்ணீர் செல்லவும், மழைக்காலங்களில் தண்ணீர் வடிய வைக்கவும் பெருந்தடையாக இருந்து வருகிறது.

விவசாயிகள் கோரிக்கை

அதனால் விவசாய நிலங்கள் சரியான பாசனவசதி கிடைக்காமல் பாதிக்கப்படுகிறது. மழைக்காலங்களில் விளைநிலங்களில் மழைநீர் புகுவதாலும் பாதிப்பு ஏற்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கிறார்கள்.

நடப்பு ஆண்டு வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கும் முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுள்ளான் ஆற்றில் வேம்பக்குடி முதல் அகரமாங்குடி வரையிலான வடிகால் பகுதிகளில் தண்ணீர் செல்ல தடையாக உள்ள வெங்காய தாமரை செடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com