ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டம் - ராமதாஸ் வரவேற்பு

ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டத்திற்கு கவர்னரின் ஒப்புதலை விரைவாக பெற வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டம் - ராமதாஸ் வரவேற்பு
Published on

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான அவசர சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டிருப்பதாகவும், கவர்னரின் ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் பிரகடனம் செய்யப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இது மிகவும் வரவேற்கத்தக்கது.

ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்திற்கு விரைவாக கவர்னரின் ஒப்புதலை பெற வேண்டும். அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் சட்ட மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று முதல்-அமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com