அரசு ஆதிதிராவிடர் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையவழி பொதுமாறுதல் கலந்தாய்வு

இணையவழி பொதுமாறுதல் கலந்தாய்வு 16.06.2026, 17.06.2026 மற்றும் 18.06.2026 ஆகிய நாட்களில் காலை 10.00 மணி முதல் அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
பள்ளி ஆசிரியர்களுக்கு இணையவழி பொதுமாறுதல் கலந்தாய்வு
Published on

சென்னை,

தமிழக அரசின் பள்ளிக்கல்வி ஆதிதிராவிடர் நல இயக்குநர்வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பொதுமாறுதல் கலந்தாய்வு

2026 2027 ஆம் கல்வி ஆண்டிற்கான இணையவழி பொது மாறுதல் கலந்தாய்வு ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளி நல /மேல்நிலைப்பள்ளி / உயர்நிலைப்பள்ளி /ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள், கணினி பயிற்றுநர், உடற்கல்வி இயக்குநர் / உடற்கல்வி ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்/ காப்பாளர், இடைநிலை ஆசிரியர்/ காப்பாளர் ஆகிய பணியிடங்களுக்கு மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான இணையவழி பொதுமாறுதல் கலந்தாய்வு 16.06.2026, 17.06.2026 மற்றும் 18.06.2026 ஆகிய நாட்களில் காலை 10.00 மணி முதல் அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

இணையவழியில் விண்ணப்பித்தவர்கள் மட்டும்

பணியிட மாறுதல் கோரி இணையவழியில் விண்ணப்பித்தவர்கள் மட்டும் இணையவழி பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com