ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது

ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது
Published on

திண்டுக்கல் தாலுகா அலுவலக சாலையில், மேற்கு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும் வகையில் சென்ற ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர் ஏர்பேர்ட்நகர் பகுதியை சேர்ந்த குணசேகரன் (வயது 37) என்பதும், ஆன்லைன் லாட்டரி சீட்டுகளை விற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் ரூ.82 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com