ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்றவர் கைது

கூத்தாநல்லூர் அருகே ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.
ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்றவர் கைது
Published on

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் அருகே உள்ள கீழவாழச்சேரியில் ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக கூத்தாநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இந்த பகுதியில் ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்ற ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் (39) என்பதும், இவர் பொதக்குடி, வாழச்சேரி பகுதிகளில் ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனை செய்ததும் தெரிய வந்தது. .இது குறித்து கூத்தாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com