ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்றவர் கைது

கூத்தாநல்லூர் அருகே ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.
ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்றவர் கைது
Published on

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் மற்றும் லெட்சுமாங்குடி பகுதியில் லெட்சுமாங்குடி, மன்னை சாலை, மரக்கடையைச் சேர்ந்த கண்ணன் (வயது47) என்பவர் ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வருவதாக கூத்தாநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்ணனை பிடித்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்து மன்னார்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com