சணல் பொருட்கள் தயாரிக்க ஆன்லைனில் பயிற்சி - மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் ஏற்பாடு

தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் சார்பில் சணல் பொருட்களை தயாரிப்பது பற்றி ஆன்லைனில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பயிற்சி அளிக்கப்படுகிறது.
சணல் பொருட்கள் தயாரிக்க ஆன்லைனில் பயிற்சி - மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் ஏற்பாடு
Published on

சென்னை,

தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் நலச்சங்கத்தின் தலைவி கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் வாரம் ஒருமுறை தொழிற்பயிற்சிகளை பெண்களுக்காக கட்டணமில்லாமல் நடத்திவருகிறது. நோய்த்தொற்று சூழலினால் நேரடியாக தொழிற்பயிற்சி அளிக்கமுடியாத சூழ்நிலை உள்ளது. இதனை கருத்தில்கொண்டு ஆன்லைன் மூலமாக டிசம்பர் மாதம் இறுதிவரை பயிற்சி வளர்ச்சி என்ற பெயரில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் நடைபெற உள்ளது.

அந்தவகையில் இந்த வாரம் சணலினால்(ஜூட்) பொருட் கள் தயாரிப்பது எப்படி? என்பது பற்றி பயிற்சி வழங்கப்படும். சணலினால் திருமண தாம்பூல பைகள், பர்சுகள், கோஸ்டர்(டேபிள் மேட்) போன்ற பலவிதமான பொருட் களை தயாரிக்கலாம். நவராத்திரி, தீபாவளி பண்டிகை காலங்களில் பரிசு பொருட்களாக சிறிய வகையிலான பொருட்களை நமது கைகளினாலேயே தயாரித்து விருந்தினர்களுக்கு அளிக்கலாம்.

அதுமட்டுமில்லாமல் இதற்கான மூலப்பொருட்கள் குறைந்தவிலையில் எங்கு வாங்குவது? என்பதும் தெரிவிக்கப்படும். அமேசான் மூலமாக நாம் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்வதற்கான வாய்ப்பும் இப்பயிற்சியில் அளிக்கப்படுகிறது.

இதற்கான பயிற்சி 4-ந்தேதி (இன்று) மதியம் 3 மணி முதல் மாலை 4.30 மணி வரை ஆன்லைன் மூலமாக பயிற்சிஅளிக்கப்படும். தங்களுடைய ஆன்டிராய்டு செல்போனில் மீட்டிங்கை form.wewatn.com/ ஐ.டி. எண்: 86231288454 என்பதன் மூலமாக இந்த பயிற்சியை பெண்கள் வீட்டில் இருந்தபடியே நேரடியாக கற்றுக்கொள்ள முடியும். மேலும் தொழில்பதிவு, திட்டஅறிக்கை, கடன்உதவி, மானியம் என அனைத்தும் சங்கத்தின்மூலம் கட்டணமின்றி வழிகாட்டுதல் செய்யப்படும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com