தமிழ்நாட்டின் உரிமையை பாதுகாக்க அதிமுக போன்ற இயக்கத்தால் மட்டுமே முடியும்: இன்பதுரை பதிவு

மோடி அரசு முன்மொழியும் அனைத்து மாநிலங்களுக்கும் சமச்சீராக 50% தொகுதி உயர்வு வழங்கும் தொகுதி மறுவரையறைத் திட்டத்தை ஆரம்பம் முதலே மதிநுட்பத்துடன் எடப்பாடி பழனிசாமி ஆதரித்து வருகிறார் என்று இன்பதுரை எம்பி கூறினார்.
இன்பதுரை
இன்பதுரை
Published on: 

அதிமுக எம்பி இன்பதுரை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது: தொகுதி மறுவரையறையில், அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே சீராக 50% தொகுதிகள் அதிகரிக்கப்பட்டால், தமிழ்நாட்டின் தற்போதைய 7.18% பிரதிநிதித்துவ விகிதம் குறையாமல்,7.23% ஆக உயர்வதுடன், நமது மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையும் 39-லிருந்து சுமார் 59 ஆக அதிகரிக்கும்.

மாறாக, அரசியலமைப்புச் சட்டத்தின் 81, 82-வது பிரிவுகளின்படி, புதிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் மாநிலங்களின் மக்கள்தொகை விகிதாசாரப்படி தொகுதிகள் மறுவரையறை செய்யும் நிலை வந்தால், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல வடமாநிலங்களின் பிரதிநிதித்துவ விகிதம் உயர்ந்து, தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவ விகிதம் குறையும் அபாயம் உள்ளது.

எனவேதான்,அரசியலமைப்புச் சட்டம் மற்றும் விகிதாசாரப் பிரதிநிதித்துவம் சார்ந்த இந்த நுட்பமான அம்சங்களைப் புரிந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, மோடி அரசு முன்மொழியும் அனைத்து மாநிலங்களுக்கும் சமச்சீராக 50% தொகுதி உயர்வு வழங்கும் தொகுதி மறுவரையறைத் திட்டத்தை ஆரம்பம் முதலே மதிநுட்பத்துடன் ஆதரித்து வருகிறார்.

தமிழ்நாட்டின் உரிமையைப் பாதுகாப்பது என்பது வெறும் உணர்ச்சிவசப்பட்ட எதிர்ப்பினால் அல்ல; தொலைநோக்குச் சிந்தனையும்,பக்குவமான அரசியல் அணுகுமுறையும் கொண்ட அதிமுக போன்ற இயக்கத்தால் மட்டுமே அது சாத்தியமாகும்! ? என்று பதிவிட்டுள்ளார்.

X