"ஒரே அடி பாக்குறியா..." மின் மீட்டரை தூக்கி அடித்த மின்வாரிய ஊழியர்...!

பாலக்கோடு மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தவர்கள் மீது மின்மீட்டரை தூக்கி அடித்த மின்வாரிய ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
"ஒரே அடி பாக்குறியா..." மின் மீட்டரை தூக்கி அடித்த மின்வாரிய ஊழியர்...!
Published on

பாலக்கோடு,

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி தீர்த்தகிரி நகரை சேர்ந்த பெண்மனி ஒருவர் நேற்று மாலை பாலக்கோடு மின்வாரிய அலுவலகத்திற்க்கு வந்து தன்னுடைய வீடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நீண்ட நேரமாக மின்சாரம் வரவில்லை என புகார் அளித்தார்.

அப்போது பணி உதவி மின்பொறியாளர் இல்லாததால் பணியில் இருந்த வணிகவிற்பனையாளர் குப்புராஜ் சரி செய்து தருவதாக பெண்மணியிடம் கூறிவிட்டு அலுவலகம் உள்ளே சென்று அமர்ந்தார். அப்போது பெண்மணியின் உடன் வந்தவர்கள் குப்புராஜை தகாத வார்த்தைகளால் பேசினர். இதனால் ஆத்திரமடைந்த குப்புராஜ் மின் மீட்டரை அவர்கள் மீது கோபத்துடன் வீசினார்.

இதனை செல்போனில் படம் பிடித்தவர்கள் சமூக வலைதளங்களில் பரவ விட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே மின்மீட்டரை தூக்கியடித்த மின்வாரிய ஊழியர் குப்புராஜ் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக பாலக்கோடு உதவி செயற்பொறியாளர் வனித்தா தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com