தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தான் தமிழ்நாட்டை மாறிமாறி ஆள வேண்டும்- தமிமுன் அன்சாரி

தி.மு.க.வை தனிமைப்படுத்தும் முயற்சி நடக்கிறது என்று தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.
தமிமுன் அன்சாரி
Published on

கடலூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-பிற கட்சிகளில் இருக்கக்கூடிய எம்.எல்.ஏ.க்களை ஆசைவார்த்தை கூறி ராஜினாமா செய்ய வைத்து, அவர்களை தங்கள் வசப்படுத்துவது தான் தூய அரசியலா. அ.தி.மு.க.வை பிளவுபடுத்தி, பலவீனப்படுத்தி ஒழிக்க வேண்டும் என்பது தான், டெல்லியில் உள்ள சில கட்சிகளின் நீண்ட கால திட்டம். அந்த திட்டங்களை தற்போது ஒன்றன்பின் ஒன்றாக அமல்டுத்தி வருகின்றன.

திமுகவை தனிமைப்படுத்த முயற்சி

அதுபோல தி.மு.க.வை தனிமைப்படுத்தும் முயற்சியும் நடக்கிறது. திராவிட கட்சிகள் இரண்டையும் ஒழிக்க வேண்டும் என்பதே அவர்களது திட்டம்.இன்றைய சூழலில் தி.மு.க.வை காப்பாற்றுவது தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஜனநாயக சக்திகளின் கடமை.

தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தான் தமிழ்நாட்டை மாறி மாறி ஆள வேண்டும் என்பது எங்கள் அரசியல் விருப்பம், எங்கள் கட்சியின் நிலைப்பாடு. தி.மு.க.வை தனிமைப்படுத்தவும், அ.தி.மு.க.வை பிளவுபடுத்தவும் திட்டமிடுகிறார்கள். அவை இரண்டையும் தமிழக மக்கள் ஏற்க அனுமதிக்க கூடாது.

X

Daily Thanthi
www.dailythanthi.com