ஊட்டி ஸ்பார்டன் அணி வெற்றி

மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் ஊட்டி ஸ்பார்டன் அணி வெற்றி பெற்றது.
ஊட்டி ஸ்பார்டன் அணி வெற்றி
Published on

நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான ஏ, பி, சி டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று கோத்தகிரி காந்தி மைதானத்தில் ஏ டிவிஷன் பிரிவில் ஊட்டி ஸ்பார்டன் அணியும், குன்னூர் யங் ஸ்டார்ஸ் அணியும் மோதியது. தலா 35 ஓவர்கள் கொண்ட போட்டியில் டாஸ் வென்று ஊட்டி ஸ்பார்டன் அணி முதலில் பேட்டிங் செய்தது. 33 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 219 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 210 பந்துகளில் 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய குன்னூர் யங் ஸ்டார்ஸ் அணி 27.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. ஊட்டி ஸ்பார்டன் அணியின் பந்து வீச்சாளர்கள் ரதீஷ், சார்லஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் மூலம் ஊட்டி ஸ்பார்டன் அணி 85 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

X

Daily Thanthi
www.dailythanthi.com