அரசு மருத்துவமனைகளில் செல்போன் செயலி மூலம் ஓ.பி. சீட்டு- அமைச்சர் அருண்ராஜ் தகவல்

அரசு மருத்துவமனைகளில் ஓ.பி. சீட்டு வாங்குவதற்கே 1 மணி நேரம், 2 மணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது என்று அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
அரசு மருத்துவமனைகளில் செல்போன் செயலி மூலம் ஓ.பி. சீட்டு- அமைச்சர் அருண்ராஜ் தகவல்
Published on

சென்னை,

தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாகவும், நோயாளிகள் வரிசையில் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க ஆன்லைனில் ஓ.பி. சீட்டு வழங்குவது தொடர்பாக ஒரு செல்போன் செயலி (ஆப்) உருவாக்கப்பட உள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.

ஓ.பி. சீட்டு வாங்க காத்திருக்கும் நிலை:

இது தொடர்பாக அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் காத்திருக்கும் நேரம் அதிகமாக உள்ளது. திங்கள்கிழமை, செவ்வாய்கிழமை போன்ற நாட்களில் சென்னையில் உள்ள ஸ்டேன்லி, சென்னை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை போன்ற அரசு மருத்துவமனைகளுக்கு கிட்டத்தட்ட 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் பேர் வரை வெளிநோயாளிகள் வருகின்றனர். அவர்கள் ஓ.பி. சீட்டு வாங்குவதற்கே 1 மணி நேரம், 2 மணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அதுவும் வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

செல்போன் செயலி மூலம் ஓ.பி. சீட்டு:

எனவே தனியார் மருத்துவமனை போல அரசு மருத்துவமனைகளில் முன்னரே ஆன்லைனில் ஒரு செல்போன் செயலி மூலம் ஒரு அப்பாயிண்ட்மென்ட் வாங்கிவிட்டு 8 முதல் 8.30 மணிக்குள் அல்லது 9 மணி முதல் 9.30 மணிக்குள் என ஒரு நேரத்தை முடிவு செய்து, செல்போன் செயலி மூலம் ஆதாரை பயன்படுத்தி அப்பாயிண்ட்மென்ட்டை உறுதி செய்துவிட்டு மருத்துவக்கல்லூரிக்கு வருவதற்கான ஒரு திட்டம் குறித்து விவாதித்துள்ளோம். கூடிய விரைவில் அதை தொடங்க திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com