கட்டுப்பாட்டு அறைகள் திறப்பு, தொலைபேசி எண்கள் அறிவிப்பு: தமிழகத்தில் பணியாற்றும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவி; தொழிலாளர் துறை நடவடிக்கை

தமிழகத்தில் பணியாற்றும் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு உதவிடும் வகையில் மாநில கட்டுப்பாட்டு அறைகளை திறந்திருப்பதுடன், தொலைபேசி எண்களையும் தொழிலாளர் துறை வெளியிட்டு உள்ளது.
கட்டுப்பாட்டு அறைகள் திறப்பு, தொலைபேசி எண்கள் அறிவிப்பு: தமிழகத்தில் பணியாற்றும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவி; தொழிலாளர் துறை நடவடிக்கை
Published on

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்

வெளிமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் தமிழகத்தில் பணியாற்றி வருகின்றனர். நோய் பரவல் அதிகரிக்கும் தற்போதைய அசாதாரண சூழ்நிலையில், அவர்களது சொந்த மாநிலத்திற்கு செல்வதைத் தவிர்க்கும் வகையில், அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் தொழிலாளர் துறை சார்பில் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக தகுந்த நிவாரணம் மற்றும் ஆலோசணை வழிகாட்டுதல் மற்றும் பிற துறைகளுடன் ஒருங்கிணைந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

அத்துடன், மாநில கட்டுப்பாட்டு அறை கடந்த மாதம் 22-ந்தேதி முதல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் சென்னை மற்றும் 8 மாவட்டங்களில் உள்ளவர்கள் நலன் கருதி அறிவிக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்பு கொண்டு பயனடையலாம்.

தொலைபேசி எண்கள்

சென்னை தொலைபேசி எண்கள் 044-2432 1438, 044-2432 1408, செல்போன் எண்கள் 94442-00470, 98410-16277, 98401-13313, 98404-32526, திருவள்ளூர் செல்போன் எண்கள் 94428-32516, 95975-77599, காஞ்சீபுரம் 98400-90101, 96778-29007, செங்கல் பட்டு 99408-56855, 99526-39441.

மேற்கண்ட தகவல்களை தொழிலாளர் ஆணையர்அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com