நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

நெமிலி அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.
நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
Published on

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகே அகவலம் கிராமத்தில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் ஆஷா மார்கண்டேயன் தலைமை தாங்கினார்.சிறப்பு விருந்தினராக நெமிலி ஒன்றியகுழு உறுப்பினர் கிருஷ்ணவேணி வெங்கடேசன் கலந்துகொண்டு நெல்கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார்.

இந்த நெல்கொள்முதல் நிலையத்தால் ரெட்டிவலம், வேட்டாங்குளம், அகவலம் ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பயனடைவர். மேலும் இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் விவசாயிகள் தான் விளைவித்த நெல்லை விற்பனை செய்து பயன்அடையும் நோக்கத்தோடு நெல்கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com