விளையாட்டு மைதானம் திறப்பு

பாவூர்சத்திரம் அருகே விளையாட்டு மைதானம் திறப்பு விழா நடந்தது.
விளையாட்டு மைதானம் திறப்பு
Published on

பாவூர்சத்திரம்:

தோரணமலை முருகன் கோவில் பரம்பரை அறங்காவலரான மறைந்த கே.ஆதிநாராயணனின் சொந்த ஊரான முத்துமாலைபுரத்தில் உள்ள அவர்களது குடும்ப வீட்டின் ஒரு பகுதியில் கிராமப்புற மாணவர்களுக்காக மாலை நேர படிப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் அவர்களுக்கு சொந்தமான இடத்தில் ஊர் இளைஞர்களுக்காக விளையாட்டு மைதானமும் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. ஆவுடையானூர் மருத்துவர் தர்மராஜ் திறந்து வைத்தார். திருச்செந்தூர் தாசில்தார் கோபால கிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஸ்ரீவைகுண்டம் துணை தாசில்தார் அய்யனார், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, எல்.ஐ.சி. தமிழ்செல்வன், சென்னை திருமலைக்குமார் மற்றும் ஊர் பொதுமக்கள், மாணவ- மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாணவ-மாணவிகளின் சிலம்பம் நிகழ்ச்சி நடந்தது. மாஸ்டர்கள் சிலம்பம் பாப்பையா, கணபதி ஆசான் ஆகியோரும் கலந்து கொண்டு சிலம்பம், களறி ஆடினார்கள். கோவில் பரம்பரை அறங்காவலர் ஆ.செண்பகராமன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com