

தேனி,
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்த கனமழையால் 71 அடியைக் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 69.29 அடியை எட்டியது. அணை முழு கொள்ளளவை எட்டியதால், வைகை அணை கால்வாயில் இருந்து தண்ணீர் திறந்து விட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதையடுத்து இன்று அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோர் தலைமையில் வைகை அணை கால்வாயில் இருந்து வினாடிக்கு 150 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் நிலக்கோட்டை வட்டத்தில் 373 ஏக்கர் நிலங்களும், உசிலம்பட்டியில் 1,912 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெற்உம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.