

மதுரை,
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே அமைந்துள்ள வைகை அணையில் இருந்து கூடுதல் நீர் திறக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 1,872 கனஅடி நீர் அணையில் இருந்து வெளியேற்றப்படுகிறது. இதனால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் உள்ள விளைநிலங்கள் பாசன வசதி பெறும்.
இந்நிலையில் வைகை அணையில் இருந்து பெரியாறு பாசனப் பகுதிக்கு இன்று தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், இன்று மதுரையில் பிரதான வாய்க்காலில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தண்ணீர் திறந்து வைத்தார். கள்ளந்திரி பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற அவர், கால்வாயில் பாய்ந்தோடிய தண்ணீரில் மலர் தூவி வழிபட்டார்.